அம்பிகையே…..
பல்லவி
அம்பிகையே உன்னை அனுதினம் பணிந்தேன்
உம்பர் முனிவர் தொழும் அன்னையே ஶ்ரீலலிதா
அனுபல்லவி
அம்புலி மண்டலத்தில் அமர்ந்திருப்பவளே
உம்பர்க்கமுதளித்த செம்பொற்கழலுடையவளே
சரணம்
சம்புவும் பிரமனும் கேசவனும் ருத்திரனும்
கால்களாய் விளங்கும் கட்டிலிலீசனுடன்
இன்பமாயமர்ந்திருக்கும் சிவகாமேச்வரியே
நம்பித் துதிப்பவர்க்கு இன்பமளிப்பவளே
செம்பொன் மாமேருவில் வீற்றிலுப்பவளே
அம்புலி பிறையணிந்தவளே ஶ்ரீபுரந்தனிலுறைபவளே
அமுதக்கடல் நடுவே அழகிய மணித்வீபத்தில்
சிந்தாமணியெனும் இல்லத்திலிருப்பவளே
No comments:
Post a Comment