சீதாபதியே…
பல்லவி
சீதாபதியே ஶ்ரீ ராமசந்திரனே
பாதாரவிந்தம் பணிந்திடுமெனக்கருள்
அனுபல்லவி
மாதா கோசலையை மனம் மகிழச் செய்பவனே
கோதண்டராமனே கோடிவினை தீர்ப்பவனே
சரணம்
வேதாகம சாஸ்த்ர புராணங்கள் போற்றும்
ஆதவ குலத்தோனே மாதவனே கேசவனே
பூதலம் கொண்டாடும் அயோத்தி மன்னனே
பாதகம் புரிந்த அரக்கர் குலமழித்தவனே
சாதாரண மனிதப் பிறவியெடுத்தே
வேதனையிடர் துயர் பலவும் அனுபவித்து
சாதனைகள் பல புரிந்த சாகேதராமனே
சீதக்கடல் துயிலும் ஶ்ரீமன் நாராயணனே
No comments:
Post a Comment