சூர்யனின் ஔி இருளை அகற்றி விடுகிறது.ஆனால் ஞானம் இல்லாத உள்ளங்களின் இருளான அஞ்ஞானத்தை அகற்றுவது இல்லை ஆனால், தாயே உனது பாத கமலங்களோ மனதின் உள்ளே உள்ள இருளை அகற்றுவதோடல்லாமல் வெளியில் உள்ள இயற்கையான இருளையும் விரட்டுகிறது.உன்னுடைய பொற்கமலபாத ஸ்பரிசம் உள்ளேயுள்ள அறியாமையையும் அறவே அகற்றிவிட்டு ஸச்சிதானந்த ப்ரஹ்மஸ்வரூப சுகத்தை(எது மாறினாலும் தனது நிலைப்பாட்டை மாற்றாமல்,அதாவது அவமானத்தை பொருட்படுத்தாமல்,மௌனமாக எதிலும் எவ்விடத்திலும் த்ருப்த்தியுடனும் ஒரே மனதுடனும் எப்போதும் த்யானத்தில் இருக்கும் நிலை)
கொடுக்கிறது.
அப்யாஸாதி ஶயஜ்ஞாதா, ஷடத்வாதீத ரூபிணீ |
அவ்யாஜ கருணாமூர்திர க்ஞானத்வாந்த தீபிகா ‖ 181 ‖
அதாவது ஆழ்நிலைத்யானத்தால் அறியத்தக்கவளே,ஆறு வித உபாசனா மார்க்கங்களை கடந்த ரூபம் உள்ளவளே, காரணம் இன்றி தன் பக்தர்களுக்கு அருள்புரிபவளே,அஞ்ஞான இருட்டைபோக்கும் தீபம் போல் உள்ளவளே என்றுஅம்பிகையை புகழ்கிறது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்....ஆக நாமும் தேவீயின் பாதாரவிந்தங்களை சிக்கெனப் பிடித்துக் கொண்டால் நம் அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை வழங்குவாள்...
காரணம் எதுவுமின்றி……
பல்லவி
காரணம் எதுவுமின்றி அடியார்க்கருள்பவளே
நாரணன் கேசவன் சோதரியே ஶ்ரீ லலிதே
அனுபல்லவி
ஆரணப் பொருளே அனைத்துக்கும் முதலே
ஆறுவித துதி நெறி கடந்த வடிவுடையவளே
சரணம்
பாரினில் உனையன்றி வேறு துணை எனக்கில்லை
சீரிய உனதிரு பதமலர் துதித்தேன்
சூரிய ஒளி இருளை அகற்றுவது போலென்
காரிருள் சூழ் மன இருளை அகற்றிடுவாயே
No comments:
Post a Comment