அம்மா
பல்லவி
அம்மா உனையன்றி வேறுதுணை யாருளார்
இம்மாநிலம்போற்றும் தாயே காமாக்ஷி
அனுபல்லவி
அம்மா உன் திருநாமம் ஆயிரமும் ஓதி -- கனக
சிம்மாசனத்தில் வீற்றிருக்குமுனைப் பணிந்தேன்
சரணம்
பெம்மான் ஏகாம்ரேச்வரனுடனிருக்கும்
அம்பிகையே உமையே இமவான் மகளே
நம்பித் துதிப்பவர்க்கு நலமருள்பவளே
வெம்பவக் கடல் கடக்க நீயேயென் துணை
அம்மான் கேசவனின் அன்பு சோதரி
சும்மாயிருந்தால் பொறுப்பெனோ இனியும்
எம்மாத்திரமுனக்கு ஏழையேன் எனக்கருள
இம்மையிலும் மறுமையிலும் எனைநீயே காத்தருள்வாய்
No comments:
Post a Comment