உம்பர் புகழும் உறுதிப் பொருளே!
தும்பிச் சிரனே! தொழுதேன்: தொழுதேன்:
நம்பும் எனைநீ நழுவ விடாமல்
அம்பொன் கரத்தாய் எனைஆண்(டு) அருளே!
பொழிப்புரை:- தேவர்களெல்லாம் புகழ்ந்து பேசும் உறுதிப் பொருளே! யானை வடிவானவனே! உன்னைத் தொழுதேன். உன்னையே நம்பும் என்னைக் கைவிட்டு விடாமல் உன் அழகிய பொற்கரத்தால் ஆண்டு கொண்டு அருளுவாய்!.
தும்பிமுக……
பல்லவி
தும்பிமுகப் பெருமானே உம்பர்கள் பணிவோனே
சம்புவின் தலைமகனே அம்புலி பிறையணிந்தவனே
அனுபல்லவி
கும்ப முனிக்கருள்செய்த குணநிதியே கணபதியே
அம்புய நாபன் கேசவன் மருகனே
சரணம்
செம்பொன் கரத்தோனே கணங்களின் தலைவனே
நம்புமடியார்க்கு பேரின்பம் அளிப்பவனே
வெம்பவக் கடலினைக் கடந்திட வேண்டியே
உன் பதம் பணிந்தேன் ஆண்டருள்வாயே.
No comments:
Post a Comment