ஸிம்ஹமுகே ரௌத்ர ரூபிண்யாம்
அபய ஹஸ்தாங்கித கருணாமூர்த்தே
ஸர்வ வியாபிதம் லோக ரக்ஷகாம்
பாபவிமோசன துரித நிவாரணம்
லட்சுமி கடாட்ச சர்வாபீஷ்டம்
அநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா
சிங்க முகமும், பயங்கர உருவமும், அபய கரமும், கருணையும் கூடிய, எங்கும் நிறைந்திருக்கும் பெருமானே..! இவ்வுலகைக் காத்து, பாவங்களைக் களைந்து, விரைவில் பலன் தருகின்ற அன்னை லட்சுமியின் அருளோடு கூடிய லட்சுமி நரசிம்மா..! வரங்களைத் அள்ளித் தந்தருளும்!
சிங்கமுகத்தோனை…..
பல்லவி
சிங்கமுகத்தோனை லக்ஷ்மிநரசிம்மனை
பங்கய பதம் பணிந்து உளமாரத்துதித்தேன்
அனுபல்லவி
திங்கள் திருமுகத்தாள் மகாலக்ஷ்மியை
தன் மார்பில் வைத்திருக்கும் மாதவனைக் கேசவனை
சரணம்
சரணடைந்த பக்தர்களின் பாவங்களைக் களைந்து
வரம் தரும் கரமும் அபயகரமும் காட்டி
உக்கிர முகத்துடனே எழுந்தருளிக் காட்சி தரும்
எங்கும் நிறந்திருக்கும் கருணாமூர்த்தியை
No comments:
Post a Comment