விநாயகர் அநுபூதி
(மூலமும் உரையும்)
5. குருவாய் வந்து அருளுவான்
காவா எனைஐங் கரனே! மதுரப்
பாவா ணர்புகழ் பரமென் குருவே!
நீவா விரைவாய் நிமலன் புதல்வா!
தாவா கருணைத் தளிர்சே வடியே!
பொழிப்புரை: ஐந்து கைகளை உடையவனே! என்னைக் காப்பாய். இனிமையாகப் புலவர்களால் பாடப்படும் குருவே! தூய்மையான வடிவுடைய சிவபெருமானின் மைந்தனே! நீ வருவாயாக. குற்றமில்லாத கருணையைப் பொழியும் தளிர் போன்ற செம்மையான அடிகளை உடையவனே!.
ஐங்கரனே….
.
பல்லவி
ஐங்கரனே கரிமுகனே எனைக்காத்தருள்வாய்
சங்கரன் மகனே உனையே பணிந்தேன்
அனுபல்லவி
சங்கத் தமிழ்ப் புலவர்கள் பாட்டிசைத்துப் போற்றும்
கங்கணபதியே கேசவன் மருகனே
சரணம்
திங்கள் பிறயணிந்த துங்கக்கரிமுகனே
பொங்கரவணிந்த மெய்ஞான குருவே
எங்கும் நிறைந்தவனே கணங்களின் தலைவனை
பங்கயப் பாதனே சங்கரி மைந்தனே
No comments:
Post a Comment