முன்னை…….
பல்லவி
முன்னைப் பழம்பொருளே மூவருக்கும் மூத்தவளே
அரனயனரியுடன் எனையும் கூட்டிடுவாய்
அனுபல்லவி
உன்னருளாலன்றோ உலகுயிரனைத்தும்
இன்னலின்றி இயங்குது கேசவன் சோதரி
சரணம்
பன்னகாபரணனின் வெண்ணிற ஒளியாலும்
பன்னகசயனனின் கருநீல நிறத்தாலும்
உன்னிருகமல பத சென்னிறத்தாலும்
மின்னுமுன் திருவடி பற்றியே துதித்தேன்
No comments:
Post a Comment