அம்பிகையே
பல்லவி
அம்பிகையே உனது மலரடி பணிந்தேன்
நம்பித்துதிப்போர்க்கு இன்பமளிப்பவளே
அனுபல்லவி
வெம் கலி வாட்டிடும் புவியிலுன் பதமே
அம்புலியெனக் குளிர் தரும் நல் தருவே
சரணம்
சம்பு கபாலியின் மனங்கவர் கற்பகமே
அம்புயநாபன் கேசவன் சோதரியே
சும்ப நிசும்பரை மாய்த்தவளே மலைமகளே
உம்பர் முனிவர் பணி உமையே ஶ்ரீ லலிதா
No comments:
Post a Comment