அம்மாகுளிர்ந்த கிரணங்களை வீசும் சந்த்ரன் , உன் பாதங்களை பூஜித்த பலனை அடைந்தான்.உனது வதனமோ வெண்மதி,உன்னுடைய கன்னங்களோ சந்த்ரனை பதித்து வைத்தது போன்று உள்ளன. அதனாலேயே சந்த்ரன் உன்னை பூஜித்த பலனை அடைந்து உன் அங்கமாகவே திகழ்கிறான் என்கிறார் பட்டத்ரி.... மேலும் ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள் அவர்கள் சௌந்தர்யலஹரியில் அம்பிகையின நெற்றியை பிறைச்சந்த்ரனாக உருவகப்படுத்தி வர்ணித்துள்ளார்.தேவீயின் லாவண்யத்தை சந்த்ர கலையுடனே உவமானம் செய்துள்ளார்...
லலாடம் லாவண்ய-த்யுதி-விமல-மாபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுட-கடிதம் சந்த்ரஸகலம்
விபர்யாஸ-ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேப-ஸ்யூதி: பரிணமதி ராகா-ஹிமகர:
ஹே பகவதி! உன்னுடைய நெற்றியானது உன் கிரீடத்தில் கீழ்நோக்கி தொங்கவிடப்பட்ட சந்த்ரகலை போல் காட்சியளிக்கிறது. ஏற்கனவே கிரீடத்திலுள்ள மேல் நோக்கியுள்ள சந்த்ரகலையையும் உன் நெற்றியாகிய சந்த்ரகலையையும் மாற்றி வைத்தால் இரண்டும் இணைந்து பூர்ணசந்த்ரனாகக் காட்சி தரும். ஆக தேவியின் நெற்றியானது மனத்தின் அதிஷ்டான தேவதை என்பதால், அதைச் சந்திர கலையாகத் தியானம் செய்தால் மனஜயம் உண்டாகும்.இவ்வாறு மனத்தில் எண்ணி அமாவாசையன்று வானில் முழுநிலவைக் கொணர்ந்து காட்டிய அபிராம பட்டரின் சாதனை வியக்கத்தக்கதுதானே!!!!!!
கவிழ்த்த…..
பல்லவி
கவிழ்த்த பிறைபோல் நுதலுடையவளே
கவிகள் புகழ் பாடும் ஶ்ரீலலிதாம்பிகையே
அனுபல்லவி
புவி போற்றும் அழகுடைய கேசவன் சோதரி
பவள வாயுடையவளே உனையே துதித்தேன்
சரணம்
அணிந்திருக்குமுன்னழகு பொற் கிரீடம் தனிலே
விளங்கும் சந்திர கலையுடன் உனது
நெற்றியெனும் அழகுப் பிறைநிலவும் சேர்த்தால்
பூரண சந்திரன் பொலிவுடன் தோன்றும்
அன்னையுன் வதனமோ அழகிய வெண்மதி
உன்னிரு கன்னங்களோ ஒளிதரும் பிறைகள்
உன்னை துதித்துன்னருள் பெற்ற சந்திரனோ
உன்னதமான உன்னங்கமாய்த் திகழ்கிறான்
No comments:
Post a Comment