சித்திரத்தில்...
பல்லவி
சித்திரத்தில் கண்டேனுனை ஶ்ரீலலிதாம்பிகையே
சித்தத்திலிருத்தியே கழலிணை பணிந்தேன்
அனுபல்லவி
உத்தமியே உமையே கேசவன் சோதரியே
நித்தமுமுனைத் துதிக்கும் அருளொன்றே வேண்டினேன்
சரணம்
பத்தரை மாற்றுப் பசும்பொன்னே நவரத்தினமே
பக்தருக்கருள் தரும் நித்திலமே ஈச்வரியே
வித்தகர் அறவோர் நிறை கீளம்பாக்கமெனும்
சத்தியபுரி வளர் திரிபுரசுந்தரியே
No comments:
Post a Comment