ஶ்ரீ ருக்மணி.......
பல்லவி
ஶ்ரீருக்மணி உன் பாதம் பணிந்தேன்
பாருக்குள் சிறந்த த்வாரகைப் பதிதனில்
அனுபல்லவி
தேரினில் வந்து சிறையெடுத்து
போரினில் வென்று கண்ணன் மணம் முடித்த
சரணம்
ஈருடல் ஓருயிர் என்றிருந்தவளை
மாறி நின்று பிரிந்து வாழ்ந்திடவே
மாமுனி சாபமளித்தனாலே
தனிமையில் கோயிலில் வீற்றிருக்கும்
கார்வண்ணன் கேசவன் நேசிக்கும் திருமகளே
பார் புகழுமன்னையே பரம கல்யாணி
நாற்கவிகள் போற்றும் அழகிய அலைமகளே
பார்கவி உலக நாயகியே திருமகளே
No comments:
Post a Comment