ஸ்ரீ கற்பகவல்லியம்மன் பதிகம்
பொய்வைத்த சிந்தை மடமங்கையர்கள் வாசனைப் பூங்குழலிலே நிழலிலேபொழியம்புபோலமிரு விழியம்பிலே பொடிப்பூச்சிலே கைவீச்சிலே
செய்தொப்பமிட்ட செப்பெனுமுலையிலே, துடிசிற்றிடையிலே, உடையிலே, தெட்டிலே, நந்நுதற் பொட்டிலே வெண்ணகைச் செம்பவள வாயிதழிலே,
பைவைத்த விடவரவமெனு நிதம்பத்திலே பாழறி வழிந்து மூழ்கிப் பரகதிக்கொரு தவிச்செய்கையிமிலாக் கொடும் பாதகனையாள்வதன்றோ
மெய்வைத்தகையானிடத்தில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே!
பொய்யை மனதில் கொண்ட மங்கையர்களின் மணம் மிகுந்த கரிய கூந்தல், அம்பு போன்ற கூரிய இரு கண்கள், பொடிப்பூச்சு, ஒயிலான கை வீச்சு, மதர்த்த செப்புக்கலசம் போன்ற கொங்கைகள், உடுக்கை போன்ற இடை, அணிந்திருக்கும் ஆடைகள், நெற்றிப் பொட்டு, முறுவலிக்கும் செம்பவளம் போன்ற இதழ், விடம் கொண்டப் பாம்பைப் போன்ற அல்குல் ஆகியவற்றில் மூழ்கி அறிவிழந்து தடுமாறும், பரகதி அடைய நினையாத பாதகனை, என்று ஆள்வாய், அம்மா கற்பகவல்லியே. மெய்யிற்கே இருப்பிடமான சிவபெருமானின் இடப்பாகம் கொண்ட அமுதானவளே! சோலைகள் நிறைந்த திருமயிலையில் கோயில் கொண்ட மணம் வீசும் மலர்களை அணிந்த சடையாளே! தாமரை மலர் பதத்தாளே! பரிசுத்தமானவளே! கற்பகவல்லியே!
கமல மலர்ப்பதத்தாளே....
பல்லவி
கமல மலர்ப் பதத்தாளே கற்பகவல்லி
கபாலீசனினிடப்புறம மர்ந்தவளே
அனுபல்லவி
அமுதமே மலரணிந்த கருங்குழலாளே
மயிலைப்பதியமர்ந்த கேசவன் சோதரி
சரணம்
கள்ளம் நிறைந்த உள்ளம் கொண்ட
கன்னியரின் மணமிகு கருங்கூந்தலிலும்
மைவிழியழகிலும் கைகளின்வீச்சிலும்
முகப் பூச்சிலுமாடையணிகலனிலும்
செம்பவள இதழிலும் நெற்றிப் பொட்டிலும்
செம்புக்கலசமெனத்திகழும் முலைவடிவிலும்
கொடியிடையிலுமரவின் படமென விளங்கும்
அல்குலையும் நினைந்துழலும் பாதகனைக் காத்தருள்வாய்
No comments:
Post a Comment