காற்றின் புதல்வனே…..
பல்லவி
காற்றின் புதல்வனே வாயுகுமாரனே
காத்தருள்வாயெனையே ஶ்ரீ ராம தூதனே
அனுபல்லவி
ஏற்றமிகு கேசவனின் அருகிலெப்போதும்
வீற்றிருப்பவனே விநயம் மிகுந்தவனே
சரணம்
ஆற்றலுடன் கடல் கடந்து அன்னை ஜானகியை
தேற்றியவர் மனம் மகிழ கணையாழி தந்தவனே
தோற்றத்தில் எளியவனே போற்றுதற்குரியவனே
நாற்றிசையும் புகழ் விளங்கும் உனதடிபணிந்தேன்
No comments:
Post a Comment