Thursday, 1 July 2021

மலரடி……

முராரியின் பாதம், த்ருவிக்ரம அவதாரம் செய்த போது ப்ரும்ம லோகத்தை எட்டியது . ப்ரும்மா அந்த பாதத்தை தன் கமண்டல ஜலத்தினால் அலம்பினார். அந்த ஜலமே கங்கையானது மட்டுமன்றி விஷ்ணுபதி என்றும் மூன்று உலகங்களில் பரந்து ஓடுவதால் த்ரிபதீ என்றும் வழங்கலாயிற்று.கங்காதரன்உன் பாதத்தில் தலையை வைத்த போது கங்கையின் நீர் உன் பாதங்களைத் தொட்டு பெரும் பேறு பெற்றது. ஏற்கனவே உயர்ந்த கங்கைக்கு மென்மேலும் உயர்ந்த மதிப்பை அம்மா நீ அருளுகிறாய் என்கிறார் நாராயண பட்டத்ரி...

.மேலும் *ஸௌந்தர்யலஹரியில்  54 வது ஸ்லோகத்தில்* ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாள்...பரமேஸ்வரனுக்கு அடிமையான மனதோடு பதிவ்ருதா சிரோன்மணியான ஹே பரதேவதையே உன் மைத்ரமான கருணாம்ருதத்தால் நிறைந்ததாகவும்,ஒன்றுக்கொன்று ஸம்பந்தமில்லாமல் சிவப்பு,வெளுப்பு,கருப்பு என்ற வர்ணங்களுடன் கூடிய மூன்று விதமான ரேகைகளால் அலங்கரிக்கப்பட்டதாயும் இருக்கின்ற கண்களால் சிவப்பு வர்ணமாய் மேற்கு நோக்கி போகிற புருஷரூபமான  புண்ய நதியான சோணபத்ரா,வெளுப்பு வர்ணமாய் கிழக்கு திக்கை  நோக்கி போகிற பாகீரதி,ஸூர்யனுடைய பெண்ணாயும் கருப்பு வர்ணமுள்ளதாய் கிழக்கு திக்கை நோக்கி.போகும் யமுனா என்ற தீர்த்தங்களுடைய பாபத்தை நாசம் செய்கிறதான ஸங்கமத்தை எங்களை பரிசுத்தம் செய்து வைப்பதற்கு உண்டு பண்ணுகிறாய் என்பது நிச்சயம்.தன்னுடைய த்ருஷ்டியில் ரேகை என்கிற வ்யாஜத்தால் ப்ரகாசப்படுத்துகின்றாளோ என்று நினைக்கக்கூடியதாகவும் இருக்கிறது.அதாவது,முன் சொன்ன மூன்று நதிகளும் ஸூராபாளம்,ஸ்வர்ணஸ்தேயம்,ப்ரம்மஹத்தி,

குருதல்பகமனம்,

தத்ஸம்ஸர்கம் என்ற ஐந்து விதமான மஹா பாபங்களைச் செய்தவர்களையும் பாபத்தில்இருந்து விமுக்தர்களாகச் செய்து பரிசுத்தம் செய்துவைக்கும் ஸ்வபாவமுள்ளவை. மூன்றும் ஒன்றாகச் சேர்ந்தால் அதன் மஹிமையைச் சொல்லவும் வேண்டுமா?இம்மூன்று நதிகளுடைய  ஸங்கமத்தையும் தேவீயினுடைய த்ருஷ்டியில் தான் காணமுடியும்.தேவீயினுடைய கடாஷத்தால் பார்க்கப்பட்ட உபாஸகர்கள்

மஹாபரிசுத்தர்கள் என்பது ஸித்தமாகும்..இவ்விதமாக தேவீயை த்யானம் செய்கிறவர்கள்,அஞ்ஞானத்தால் செய்யப்பட்ட ஸஹல 

பாபங்களிலிருந்தும் விமுத்தர்களாக ஆவார்கள் என்கிறார்....


                                                      மலரடி……


                                                        பல்லவி

                                            மலரடி பணிந்தேன் கேசவன் சோதரி

                                            லலிதாம்பிகை நீயே எனக்கருள்வாயே

                                                      அனுபல்லவி

                                            நலம் தரும் கங்கை யமுனை சரச்வதி

                                            பலமுடனுன்  பார்வையில் இருப்பதறிந்துன்

                                                             சரணம்

                                            திருமால் கேசவன் திருவடி பணிந்து

                                            பிரமன் வார்த்த நீர் த்ரிபதீ என்றாகி

                                            பகீரதன் செய்த தவத்தால் சிவனது

                                            சடை வழி வந்து கங்கையென்றானது      


                                            கங்கையை ஏந்திய சிவபெருமானும்

                                            கங்காதரனாயுன் பதம் பணிந்தபோதுன்

                                            பங்கய பதமந்த கங்கையின் மேல் பட்டு

                                            கங்கையை மேலும் புனிதமாய்ச் செய்த உன்   

                                                                                                                                              

No comments:

Post a Comment