அக்ஷ்ணோஸ்ச ஸ்தநயோ:ஸ்ரியா
ஸ்ரவணயோ:பாஹ்வோஸ்ச மூலம்
ஸ்ப்ருசன் உத்தம்ஸேன முகேந ச
ப்ரதிதினம் த்ருஹ்யன் பயோஜந்மநே|
மாதுர்யேண கிராம் கதேந ம்ருதுநா
ஹம்ஸாங்கநாம் ஹ்ரேபயன்
காஞ்சீ ஸீம்நி சகாஸ்தி கோzபி
கவிதாஸந்தான பீஜாங்குர : 14
ஸ்துதி சதகம்
காது வரையில் பரவியுள்ள கண் அழகுடனும்,தோள் வரையில் வியாபித்துள்ள ஸ்தன சோபையுடனும், முகத்தாலும்,சிரஸ் மணியாலும் தாமரையைக் கீழ்ப்படுத்தும் லக்ஷணத்துடனும்,வார்த்தைகளுடைய இனிமையாலும்,மிருதுவான நடையாலும் ஹம்ஸ ஸ்திரீயை வெட்கப்படச் செய்தும்,கவிதையாகிற ஸந்தானத்திற்கு விதை முளைபோல் இருக்கிற ஒரு வஸ்துவானது காஞ்சிக் கரையில் பிராகசிக்கிறது.
கவியெழுத….
பல்லவி
கவியெழுத த்தூண்டும் காவியமே காமாக்ஷி
புவி போற்றும் காஞ்சி வாழ் கேசவன் சோதரி
அனுபல்லவி
அவியுண்ணும் அமரரும் கடவுளரும் பணிபவளே
அவுணரையழித்திடும் அகிலாண்டேச்வரியே
சரணம்
செவி வரை பரவிய கமலக்கண்ணழகும்
தோள் வரையில் பரவிய அழகிய முலையும்
அன்ன நடையும் நல்வாக்கும் கொண்டவளே
கருவைர மணி முடியால் கமலத்தைப் பழிப்பவளே
No comments:
Post a Comment