பக்தியுடன்……
பல்லவி
பக்தியுடன் உனது மலர்ப் பதமே
முக்தி பெறப் பற்றினேன் பாண்டுரங்கா
அனுபல்லவி
உக்தி உபாயம் வேறொன்றறியேன்
பக்தனெனக்கருள்வாய் கேசவனே
சரணம்
நித்தியமும் உன் நாமமே நினைந்து
சத்திய நாதனுனை பாடித்துதித்தேன்
வித்தகனே உனைக் காணவே விழைந்தேன்
பக்தன் கூர்மனைப் போலெனக்கருள்வாயே
No comments:
Post a Comment