எங்கும் நிறைந்திருக்கும்..,,
பல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் கணபதியைத்துதித்தேன்
மங்கள மூர்த்தியைப் பிரணவப் பொருளை
அனுபல்லவி
கங்காதரன் சிவன் சங்கரன் மகனை
பங்கய நாபன் கேசவன் மருகனை
சரணம்
திங்கள் பிறையணிந்த துங்கக்கரிமுகனை
பொங்கரவணிந்த சங்கரி குமாரனை
பொங்கும் மூவாசைப் பிணி போக்கும் ஐங்கரனை
சங்கடமிடர் களைந்து அருள் புரிய வேண்டுமென
No comments:
Post a Comment