ஆயிரம் கண்ணுடையாளை….
பல்லவி
ஆயிரம் கண்ணுடையாளை ஆதிபராசக்தியை
ஓயாது துதித்தேன் சமயபுரம் திருத்தலத்தில்
அனுபல்லவி
ஞாயிறொரு கோடி ஒளியையும் மிஞ்சும்
பேரொளி உடையவளை கேசவன் சோதரியை
சரணம்
தீயினை க்கண்ணில் தாங்கும் தீன தயாபரியை
மாயி மகா மாரியெனும் நோய் தீர்க்க வேண்டியே
பாயிரம் பலவும் பாடி மலர்த்தாள் பணிந்தேன்
தாயினும் மேலானவளே பாரிலெமைக் காத்தருள்வாய்
No comments:
Post a Comment