யார் சொல்……
பல்லவி
யார் சொல் நீ கேட்டாயோ ஶ்ரீ ரகுராமா
பார் புகழும் பரந்தாமா ஏனிந்தப் பாராமுகம்
அனுபல்லவி
பார்த்தனுக்கு சாரதியாய் பாரதப்போர் தனிலே
தேரோட்டிப் பண்டவரை வென்றிடச் செய்தவனே
ஊர் பேசும் பேச்செல்லாம் மெய்யென நீ நினையாதே
நாற்கவிகள் புகழ்ந்தேத்தும் கோதண்டபாணியே
மார்பினில் வீற்றிருக்கும் என் தாயின் சொல் கேளாய்
கார்வண்ணக் கேசவனே உன் நாமமே துதித்தேன்
No comments:
Post a Comment