நடராஜன் வெள்ளிபனிமலையில் படுத்திருப்பதாகவும் ப்ரம்மா வெள்ளைத் தாமரையில் தனது ஹம்ஸ வாஹனத்தில் அமர்ந்திருப்பதைப் போலவும்,மஹாவிஷ்ணு தன் துணைவியுடன் பாற்கடலில் ஸயனித்திருப்பதைப் போலவும் இந்த்ரன் மானஸரோவரில் குளித்து வெண்மையானது போலவும் இருக்கின்றது.ப்ரம்மா,விஷ்ணு,சிவன் ஆகிய மூவரும் இந்த்ரனுடன் இணைந்து ஞானப்ரஹாஸத்தை உன்னிடமிருந்து பெறுகின்றனர் என்கிறார் பட்டத்ரிகள்....
தாயே! தாமரை மலர்களைப் போன்று சிவந்த உன் திருவடிகளிலிருந்து எழுந்த மிக நுண்ணிய தூளியை சேர்த்து வைத்துக் கொண்டு பதினான்கு உலகங்களையும் பிரம்மா விசாலமாகப் படைக்கிறார். அதுபோன்றே, மகாவிஷ்ணுவும் ஆதிசேஷன் என்னும் உருவில் பதினான்கு உலகங்களையும் மிகுந்த சிரமத்துடனாவது தாங்குகிறார். பரமசிவனோ, இதை நன்றாகப் பொடி செய்து கொண்டு, விபூதி பூசுவதைப் போன்று உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்.
அதுபோலவே
பவானி! என்ற பெயருடையவளும் பரமசிவனின் பத்தினியுமான தேவியே! உன் அடிமையாகிய என்னை கருணையுடன் கூடிய உன் கடைக்கண்ணால் பார்ப்பாயாக என்று கேட்க நினைக்கும் ஒருவன், பவானி! நீ என்று சொல்லத் தொடங்கி, முடிக்கும் முன்பே, அவனுக்கு விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியோரின் கிரீடங்களால் மங்கள ஆரத்தி செய்யப்பெற்ற திருவடிகளையுடைய உனது மேலான ஸாயுஜ்ய பதவியையே அளித்து விடுகிறாய்.
பரம் பொருளே…..
பல்லவி
பரம் பொருளே தேவி கேசவன் சோதரியுன்
கமல பதம் பணிந்தேன் அன்னையே காமாக்ஷி
அனுபல்லவி
சுரபதி மானசரோவரில் குளித்து
கரம் சிரம் பணிந்துனை வணங்கியே நின்றான்
சரணம்
பரமசிவன் கயிலையிலும் திருமால் பாற்கடலிலும்
பிரமனோ அன்ன வாகனத்திலும மர்ந்து
அரனயனரியுன் கருணையினாலே
அவரவர் பணிகளை சிறப்புறச் செய்தனர்
நிறம் சிவந்த அரவிந்த பதங்களில் தோன்றிய
ஒளி கொண்டு பிரமனும் ஈரேழுலகம் செய்தான்
அரவணிந்த சிவனதை நீறெனப் பூசிக்கொண்டான்
சேடனாய்த்திருமாலும் உலகங்களைச்சுமந்தான்
பரமசிவன் நாயகியே பவானி என்றழைக்கும் முன்னே
பிரமன் திருமால் சுரபதி தரித்த
கிரீடங்கள் பணிந்த உன் அரவிந்த பதங்களையென்
சிரந்தனில் வைத்துன்னருள் தந்த தாயே
No comments:
Post a Comment