க்ரீடாதே லோக ரசனா ஸகாதே சிந்மய: சிவ:
ஆஹாரஸ்தே ஸதானந்த: வாஸந்தே
ஹ்ருதயம்
"அம்மா ! இந்த உலக இயக்கம் உனக்கு ஒரு விளையாட்டு; உன்னுடைய ஸகா சின்மயா சிவன்; ஆனந்தமே உனக்கு உணவு; நீ வசிக்கும் இடமோ, என் இதயக்கோவில்"
அன்னையே……
பல்லவி
அன்னையே ஶ்ரீலலிதே ஆண்டருள்வாயே
உன்னருள் வேண்டியே அனுதினம் துதித்தேன்
அனுபல்லவி
புன்னகை பூத்த மதி முகத்தாளே
கன்னலே அழகிய கருங்குழலுடையவளே
சரணம்
பன்னகாபரணன் சிவனுன் தோழன்
பேரானந்தமே உந்தன் உணவு
பன்னகசயனன் கேசவன்சோதரி
உலக இயக்கமே உன் திருவிளையாடல்
No comments:
Post a Comment