என்ன தவம்…..
பல்லவி
என்ன தவம் செய்தேனோ பாண்டுரங்கா
உன்னைப் போற்றி பண்ணிசைத்துப் பாட
அனுபல்லவி
அன்னை தந்தை குருவனைத்தும் நீயே
நான் வணங்கும் சென்ன கேசவனும் நீயே
சரணம்
முன்னம் யான் செய்த வினைப் பயன் தொலையவும்
இன்னம் தவறுகள் செய்யாதிருக்கவும்
நன்னெறியறிவும் இசை ஞானமும் பெறவும்
தென்னாங்கூர் தலத்துறையும் ஶ்ரீஹரி விட்டலனே
No comments:
Post a Comment