மலையத்வஜ……
மலையத்வஜ……
பல்லவி
மலையத்வஜ பாண்டியக் குமாரி
மாதங்கி உனையே துதித்தேன்
துரிதம்
தேவரும் மூவரும் சனகாதி முனிவரும்
யாவரும் பணிந்திடும் லலிதாம்பிகையே
அனுபல்லவி
அலைமகள் கலைமகள் இருவரும் நேசிக்கும்
மலைமகளே மாயே கேசவன் சோதரி
சரணம்
நிலையிலா இவ்வுலகில் நிலைத்திருப்பவளே
தலைமீது திங்கள் பிறையணிந்தவளே
கலைகளை ரசிப்பவளே கயல்விழியாளே
மலைமீதமர்ந்திருக்கும் சிவபெருமான் நாயகியே
No comments:
Post a Comment