ஜானகி நாயகனே…..
பல்லவி
ஜானகி நாயகனே ஶ்ரீ ஜெயராமா
கானமியற்றியுன் கமலபதம் பணிந்தேன்
அனுபல்லவி
வானமும் பூமியும் மூவடியாலளந்தவனே
கானகம் சென்று தந்தை சொல் காத்தவனே
சரணம்
கானுறை முனிவர்களும் வானுறை தேவர்களும்
பானுவும் சந்திரனும் பிரமனுமிந்திரனும்
மானிடரனைவரும் கரம் பணிந்தேத்தும்
தீன சரண்யனே மாதவனே கேசவனே
ஆனந்தமளிப்பவனே அடியார்க்கருள்பவனே
தானவரை மாய்த்தவனே தசரதன் மைந்தனே
ஞானமும் இசையறிவும் தானமும் தவமும்
நானென்றும் பெற்றிட உனையே வேண்டினேன்
No comments:
Post a Comment