அழிக்கும் கடவுளென…..
பல்லவி
அழிக்கும் கடவுளென உனைப் பழித்தார்களென்
வழிக்குத் துணை நீயே நமச்சிவாயனே
அனுபல்லவி
விழி மூன்றுடையவனே கேசவன் நேசனே
அழிவிலாதவனே வீழிநாதனே
சரணம்
அழிப்பவன் நீயே எனது பந்த பாசங்களை
அழிப்பவன் நீயேயென் பழவினைப் பயன்களை
பழிக்குமென் எதிரிகளை அழித்தொழிப்பவனே
செழிக்கச்செய்தெனக்கு நல்வாழ்வளிப்பவனே
No comments:
Post a Comment