ஆடிப் பூரத்தில்…..
பல்லவி
ஆடிப் பூரத்தில் அவதரித்த கோதையை
நாடித்துதித்தேன் நலமருள வேண்டுமென
அனுபல்லவி
ஈடிணயில்லாத அரங்கனைக் கேசவனை
பாடிப் பரவிய பைங்கிளியை ஆண்டாளை
சரணம்
வாடிக்கையாக அரங்கனின் மாலையை
சூடிக்கொடுத்த சுடர்க் கொடியைத் திருமகளை
வேடிக்கையாய்க் கண்டு திருவடி பணிந்து
கோடி ஜென்ம வினை தீர வேண்டி நின்றேன்
No comments:
Post a Comment