கருநிற மேனியளை……
பல்லவி
கருநிற மேனியளைக் காமாக்ஷியைப் பணிந்தேன்
கருவிழியிரண்டிலும் கருணை ததும்பும்
அனுபல்லவி
கருநீலவண்ணன் கேசவன் சோதரியை
திருமகளும் கலைமகளும் நேசிக்கும் மலைமகளை
சரணம்
இருவினைப் பயன்களால் படுந்துயர் நீங்கிடவும்
குருவருளும் திருவருளும் எனக்கருள வேண்டியும்
அருந்தவ முனிவரும் அமரரும் துதித்திடும்
பெருமைக்குரிய காஞ்சி மாநகர் வளர்
No comments:
Post a Comment