ஜாதா சீதலசைலத:ஸுக்ருதிநாம்
த்ருஸ்யா பரம்தேஹிநாம்
லோகாநாம் க்ஷணமாத்ர ஸம்ஸ்மரணத : ஸந்தாப விச்சேதிநீ |
ஆச்சர்யம் பஹுகேலநம் விதநுதே
நைச்சல்யமா பிப்ர தீ
கம்பயாஸ்தடஸீம்நி காபி தடிநீ
காருண்ய பாதோமயீ || 12
பனிமலையிலிருந்து உண்டானதும்,
புண்யசாலிகளான மனிதர்களுக்கு மட்டும் பார்க்கத்தக்கதும் ,க்ஷணகாலம் தியானிப்பதால் மாத்திரமே ஜனங்களுடைய தாபத்தை நீக்குவதுமான ஒரு நதியானது(காமாக்ஷி தேவி) தயையாகிற ஜலத்தால் நிறைந்து
அசைவற்றிருந்தும் ஆநேகவித லீலைகளைச் செய்வது ஆச்சரியமாகிறது.
வெண்ணிலவுப் பிறையணிந்த…..
பல்லவி
வெண்ணிலவுப் பிறையணிந்த அன்னையே காமாக்ஷி
மண்ணில் பிறந்தது உன்னைத் தொழுவதற்கே
அனுபல்லவி
விண்ணவரும் மண்ணவரும் கரம் பணிந்தேத்தும்
கண்மணியே காஞ்சி வாழ் கேசவன் சோதரி
சரணம்
தண்ணீராய் பனிமலையில் தோன்றிய அற்புதமே
எண்ணித்துதிப்பவர்க்கு தாபம் தீர்ப்பவளே
புண்ணியம் செய்தோற்கு கண்ணெதிரில் தெரிபவளே
பண்ணிசைத்துப்பாடி உன்னையே துதித்தேன்
No comments:
Post a Comment