அன்னையின் திருப்பாதங்களை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம். அவள் திருவடிகள் இரண்டும் கேட்டவற்றை யாவையும் அள்ளி வழங்கும் கற்பகத்தரு. "மங்களங்களை அருளும் அம்பிகையே ! உன் இரு பாதங்களுமே பக்த ஜனங்கள் நமஸ்கரிக்கும் போது, கொடை வள்ளல்களாக இருக்கின்றன. ஆனால் மன்மதனை எரித்த ஸ்ரீ பரமேஸ்வரன் குற்றம் செய்தவராக உன் ஸ்ரீ பாதங்களில் தலை வணங்கும் போது, உன் ஸ்ரீ பாதங்கள் இரண்டுமே வாமமாக கொடுக்க இஷ்டம் இல்லாமல் இருக்கின்றன." மேலும்
ஹே தேவீ, உன் பாத தூளியை பக்தர்கள் சிரஸில் தாங்கும் போது அவர்களது ராகத்வேஷாதி அழுக்குகள் மறைகின்றன. ஆனால் மகிஷாஸூர மர்த்தினியே உன்னுடைய அதே பாதங்கள் மகிஷனின் தலையை பொடிப் பொடியாகத் தகர்த்தன. அப்போது அவை மேலும் ரக்த
சிவப்பான நிறம் பெற்று ப்ரகாசித்தன. ஒரே பாதங்கள் தான் பக்தர்கள் மனமாசை நீக்கி துஷ்டனாகிய மகிஷனை வதம் செய்தன என்று பாடுகிறார் பட்டத்ரி.
இதை ஆதிசங்கர பகவத் பாதாள் அம்பிகையை கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்...
ஸ்ருதீநாம் மூர்த்தாநோ தததி தவ யௌ ஸேகரதயா
மமாப்யேதௌ மாத: ஸிரஸி தயயா தேஹி சரணௌ
யயோ: பாத்யம் பாத: பஸுபதி-ஜடாஜூட-தடிநீ
யயோர்-லாக்ஷ-லக்ஷ்மீ-ரருண-ஹரிசூடாமணி-ருசி:
பொருள்:
தாயே! உன் திருவடிகளை வேதங்களின் தலைபோன்ற உபநிஷத்துக்கள் தம் தலைகளில் அணிகளாக அணிந்து கொள்கின்றன. அந்தத் திருவடிகளை எளியேனாகிய எனது தலையிலும் வைத்தருள்வாயாக! ஏனெனில் அந்தத் திருவடிகள் சிவபிரானின் ஜடாமகுடத்திலுள்ள கங்கை நீரால் கழுவப்படுகின்றனவன்றோ? அந்தத் திருவடிகளில் பூசப்பட்டுள்ள மருதோன்றியின் சிவந்த ஒளி, விஷ்ணுவின் தலையை அலங்கரிக்கும் மாணிக்கமோ என எண்ணும்படி இருக்கிறது.
அம்பிகையே…..
பல்லவி
அம்பிகையே உனது பாதங்களிரண்டும்
நம்பித் துதிபோர்க்கருள் தரும் கொடையே
அனுபல்லவி
அம்புலி பிறையணிந்த கேசவன் சோதரி
நம்புமடியார்க்கு இன்பமளிப்பவளே
சரணம்
சம்பு கபாலி காமனை எரித்ததால்
அம்புயமே நீயும் பதம் காட்ட மறுத்தனையோ
செம்பொன்னாயடியார்க்கருள் தந்த பதமலரே
வம்பன் மகிடன் தலையை பொடிப்பொடி ஆக்கியது
வேதோபநிடதங்கள் தலையணிகளாயுன்
பாதங்களைத் தாங்கி ச்சிறப்புறச்செய்த அந்த
பதம்தனையெந்தன் தலை மீது வைத்து
இதமுடன் எனக்கருள உனையே வேண்டினேன்
பாதங்களைப் பணிந்த ஈசன் சிரசிலுள்ள
சீதமிகு புனித கங்கை உன் பதங்களில் பட்டுன்
பாதங்களிலில் உள்ள செம்பஞ்சுக் குழம்பொளி
கேசவன் மகுடத்தின் வைரம் போல் மின்னியது
No comments:
Post a Comment