ஸந்த் துகாராம் மஹராஜ் அவர்களின் மிக எளிமையான ப்ரபலமான அபங்கத்தை என் சிற்றறிவுக்கு எட்டியவரை தமிழில் எழுத முயற்சி செய்திருக்கிறேன்.
சுந்தர தே த்யான உபே விடேவரி. கரகடாவரி டேவுனீயா
களா துளஸிஹார காம்சே பீதாம்பர
ஆவ்டே நிரந்தர ஹேம்சி த்யான
மகர குண்டல தளபதி ச்ரவணீ
கண்டீம் கௌஸ்துப மணி விராஜித
துகாம்ஹணே மாஜே ஹேம்சி ஸர்வ ஸுக
பாஹி ந ஸ்ரீ முக ஆவ்டீனே
என் தமிழாக்கத்தில் சொற்குற்றம் இருப்பின் அது என் தவறே ஆகும்.
ராம க்ருஷ்ண ஹரிபாண்டுரங்க ஹரி
இடுப்பில் கரம் வைத்து செங்கல்மேல் நின்றிடும்
சுந்தரா உன்னையே த்யானம் செய்கின்றேன்
ராமக்ருஷ்ண ஹரி
பாண்டுரங்க ஹரி
கழுத்தில் துளசி மாலையும்
இடையில் மஞ்சள் பட்டாடையும்
அசைந்திடும் அழகில் மனம்
எப்போதும் நிலைக்கும்
ராமக்ருஷ்ண ஹரி
பாண்டுரங்க ஹரி
மகரகுண்டலம் துலங்கிடும் திருமுகம்
கழுத்தில் கௌஸ்துபணி அழகு சேர்த்திடும்
ராமக்ருஷ்ண ஹரி
பாண்டுரங்க ஹரி
ஹரி திருமுகத்தைக் காண்பது ஒன்றே
துகாராமுக்கு என்றும் ஆனந்தமாகும்.
ராமக்ருஷ்ண ஹரி
பாண்டுரங்க ஹரி
வேண்டுவோர்…..
பல்லவி
வேண்டுவோர் வரமளிக்கும் பாண்டுரங்க ஹரியே
வேண்டியுனைத் துதித்தேன் ராமக்ருஷ்ண ஹரியே
அனுபல்லவி
தீண்டும் அரவணையில் படுத்துறங்கும் பாண்டுரங்கா
ஆண்டருள வேண்டுமென உனையே தினம் துதித்தேன்
சரணம்
மாண்புடனே செங்கல் மேல் நின்றிருப்பவனே
அழகுடனிடைதனில் கரம் வைத்திருப்பவனே
மீண்டும் மீண்டும் ஹரி உனையே துதித்தேன்
ஆண்டாள் நேசித்த அழகனே கேசவனே
கண்டமதில் திகழும் திருத்துழாய் மாலையும்
இடுப்பிலுள்ள அழகிய மஞ்சள் பட்டாடையும்
அசைந்திடுமழகில் மனம் பறி கொடுத்து
மீண்டும் மீண்டும் ஹரி உனையே துதித்தேன்
மகர குண்டலங்கள் செவி தனிலாட
கௌத்துப மணிமாலை கழுத்தினிலாட
அழகிய முகம் கண்டு ஆனந்தம் கொண்டு
பாண்டவர் நேசனே உனையே துதித்தேன்
பாண்டுரங்க விட்டலனே பண்டரீபுர விட்டலனே
பாண்டுரங்க விட்டலனே பண்டரீபுர விட்டலனே
No comments:
Post a Comment