ஆடி வெள்ளியில்…..
பல்லவி
ஆடி வெள்ளியில் அம்பிகையே உனை
பாடித்துதித்திடும் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
கோடி வினை தீர்க்கும் கேசவன் சோதரியே
ஆடிய பாதமவன் பங்கிலுறை சங்கரியே
சரணம்
நாடியுன் பதம் பணியும் நல்லடியார் குறை தீர்க்கும்
ஈடிணையில்லாத திரிபுர சுந்தரியே
வேடிக்கையாக மூவுலகும் காக்கும்
வாடிக்கையுடையவளே வடிவுடைநாயகியே
No comments:
Post a Comment