ந மந்த்ரம் நோ யந்த்ரம் ததபி ச ந ஜானே ஸ்துதிமஹோ
ந சாஹ்வானம் த்யானம் ததபி ச ந ஜானே ஸ்துதிகதா:
ந ஜானே முத்ராஸ்தே ததபி ச ந ஜானே விலயனம்
பரம் ஜானே மாதஸ் த்வதனுஸரணம் க்லேச ஹரணம்
- ஆதி சங்கரர்
பொருள்: தாயே, எனக்கு மந்திரமோ, யந்திரமோ, ஸ்தோத்திரமோ தெரியாது. எனக்கு பிரார்த்தனையோ, தியானமோ தெரியாது. உன்னைப் புகழ்ந்து பேசவும் தெரியாது. உனது முத்திரிகைகளையும் நானறியேன். ஆனால், அம்மையே உன்னை பின்பற்றி வர மட்டும் எனக்குத் தெரியும். அது ஒன்றே எனது எல்லா துக்கங்ளையும் போக்கி விடும்.
அன்னையே ஶ்ரீலலிதே……
பல்லவி
அன்னையே ஶ்ரீ லலிதே கேசவன் சோதரி
உன்னை த்துதிப்பதன்றி வேறொன்றுமறியேன்
அனுபல்லவி
முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் முதலே
பன்னகபூஷணி உன்னருள் பெறவே
சரணம்
உன் புகழறிந்திலேன் தோத்திரங்களறியேன்
உன்னைப் போற்றும் மந்திரங்கள் யந்திரங்கள்
ஏதுமறிந்திலேன் முத்திரையும் தெரிந்திலேன்
என்னைக் காத்தருளும் உன் பதமொன்றே அறிவேன்
No comments:
Post a Comment