கமலாம்பிகையே…..
பல்லவி
கமலாம்பிகையே காத்தருள்வாயெனையே
கமலநாபன் கேசவன் துணைவியே
அனுபல்லவி
கமல மலராசனத்தில் வீற்றிருப்பவளே
சமுத்திர ராஜன் விரும்பும் குமாரியே
சரணம்
அமரேந்திரனும் அமரரும் முனிவரும்
கமலாசனனும் அனைவரும் வணங்கிடும்
கமல பதமுடைய வித்யா லக்ஷ்மியே
கமல மலர் தூவி கழலடி பணிந்தேன்
No comments:
Post a Comment