நாராயணா உன்னை அப்பா என்று அழைத்தேன் அதில் ஒரு சுகம்🌹
அய்யா என்று அழைத்தேன் அதில் ஒரு சுகம்🌹
கடவுளே என்று அழைத்தேன் அதில் ஒரு சுகம் 🌷
எம்பெருமானே என்று அழைத்தேன் அதில் ஒரு சுகம் 🌷
தெய்வமாக சாமி என்று அழைத்தேன் அதில் பலமடங்கு சுகம்🌷
எப்படி அழைத்தாலும் உன்னையன்றி நான் யாரிடம் சரணடைவேன் அப்பனே
மாயங்கள் பல செய்து திருமலையில்
ஒய்யாரமாக வீற்றிருக்கும் நாராயணா
எமக்கு நீயே கதி ஐயா 🌹
எப்படி அழைத்தாலும்
பல்லவி
எப்படி அழைத்தாலும் கோவிந்தா எனக்கு
எப்போதுமுந்தன் திருவடியே கதி
அனுபல்லவி
ஒப்பிலா அப்பனே கேசவனே மாதவனே
முப்போதுமுன் நாமமே துதித்தேன்
சரணம்
அப்பனே என்றாலும் அய்யனே என்றாலும்
இப்புவி போற்றும் நாராயணா எனினும்
அப்பாவி ஜனமழைக்கும் சாமியெனச் சொன்னாலும்
தப்பாமல் திருமலையில் நின்றருளும் மலையப்பா
No comments:
Post a Comment