காலை வணக்கம்
பல்லவி
காலை வணக்கம் கற்பக கணபதியியே
நூலையெழுத முனிக்குதவிய உனக்கு
அனுபல்லவி
வேலைப் பிடித்த குமரனுக்கு மூத்தவனே
ஆலிலையில் துயின்ற கேசவன் மருகனே
சரணம்
வேலை தொடங்குமுன் தடையின்றி நடந்திட
ஞாலந்தனில் எவரும் முதல் முதல் வணங்கிடும்
பால விநாயகனே பரமசிவன் மகனே
பிள்ளையார்ப் பட்டியில் வீற்றிருப்கவனே
No comments:
Post a Comment