சங்கரனை……
பல்லவி
சங்கரனை தினம் துதிப்பாய் மனமே
பொங்கரவணிந்தவனை எங்கும் நிறைந்தவனை
அனுபல்லவி
திங்கள் பிறையணிந்தவனைக் கேசவன் நேசனை
சங்கரி மனம் விரும்பும் கயிலாயவாசனை
சரணம்
இங்குமங்குமலைபாயும் மனயானையை அடக்கும்
அங்குசமானவனைக் காமனை எரித்தவனை
வெங்கதிரோன் ஒளியை மிஞ்சும் பேரொளியுடையவனை
கங்காதரனைக் காலகாலனை
சங்கராபரண ராகப் பிரியனை
சிங்காரவேலனிடம் மறைபொருளறிந்தவனை
துங்கக்கரிமுகனைப் படைத்தவனை சிவனை
சங்கத்தமிழ் த்தலைவனை அகிலாண்டேச்வரனை
No comments:
Post a Comment