ஸ்ரீ ஸ்துதி சதகம்
கண்டம் சாந்த்ரமஸம் வதம்ஸ மநிஸம் காஞ்சீபுரே கேலநம்
காலாயஸ்சவிதஸ்கரீம் தநுருசிம்
கர்ணே ஜபே லோசநே |
தாருண்யோஷ்ண நகம்பசம்
ஸ்தநபரம் ஜங்காஸ்ப்ருஸம் குந்தளம்
பாக்யம் தேஸிக ஸஞ்சிதம் மம கதா
ஸம்பாதயேதம்பிகே || 15
தாயான காமாக்ஷியே !
எனக்கு சந்திரனுடையதான துண்டமானது எப்போதும் சிரோபூஷணமாயும்,காஞ்சிநகரில் விளையாட்டும் ,கருத்த இரும்பின் சோபையை அபகரிப்பதான சரீர காந்தியையும் ,காதுகளுடன் நெருங்கிப் பேசுகிற கண்களும்,நகத்தைக்கூட பொசுக்கக்கூடிய சக்தியுள்ள யெளவநமாகிற உஷ்ணத்துடன் கூடிய ஸ்தநபரமும் ,முழங்காலை ஸ்பர்சிக்கிற கூந்தலும் உள்ள அதிருஷ்டமானது ஆசார்ய கடாக்ஷத்தால் கிடைத்ததாக எப்போது எனக்கு ஏற்படுமோ?
காமாக்ஷி…….
பல்லவி
காமாக்ஷி தேவியுன் திருமுக தரிசனம்
குருவருளாலெனக்கு என்று கிடைக்குமோ
அனுபல்லவி
காமகோடிப் பீடமாம் காஞ்சியில்
அமர்ந்திருப்பவளே கேசவன் சோதரி
சரணம்
நிலவணிந்த அழகிய நீண்ட கூந்தலுடனும்
கண்களுடன் பேசும் செவி மடல்களுடனும்
பருவம் தருமழகு பெருமுலையுடனும்
கருத்த இரும்பின் காந்தியுடனும் விளங்கும்
No comments:
Post a Comment