ஆலோகே முக பங்கஜே ச தததீ ஸெதாகரீம் சாதுரீம்
சூடாலங்கிரியமாண பங்கஜவநீ வைராகம ப்ரக்ரியா |
முக்த ஸ்மேரமுகீ கனஸ்தனதடீ
மூர்ச்சால மத்யாஞ்சிதா
காஞ்சீ ஸீமநி காமிநீ விஜயதே
காசித் ஜகந்மோஹிநீ || 17
ஸ்துதி சதகம்
பார்வையிலும் ,தாமரை போன்ற முகத்திலும் சந்திரனுடையதான அழகை தரிப்பவளாயும் ,கூந்தலுக்கு அலங்காரமாக்கப்பட்ட தாமரையோடைக்கு எதிரியான சந்திரனுடைய சேர்க்கையை உடையவளாயும்,அழகாயும் மந்தஸ்மிதமுள்ளதுமான முகமுள்ளவளும் ,கனமான குசதடமுள்ளவளும்,புலப்படாத இடுப்பினால் விளங்குகிறவளுமான உயர்ந்த ஜகத்தை மோஹிக்கச் செய்கிற ஒரு ஸ்திரீயானவள் காஞ்சி எல்லைக்குள் விளங்குகிறாள்.
Victory to the damsel who abides in Kanchi and who enchants the
whole world who carries in her eyes and in her lotus face the sweetness of
nectar, who has the crescent moon as adornment, who has a bewitching smile,
heavy breasts and a slender middle.
கமலமலர்……
பல்லவி
கமலமலர் முகத்தாளை காஞ்சி நகருறைபவளை
சம மென தனக்கொருவரில்லாதவளைப் பணிந்தேன்
அனுபல்லவி
கமலமலர் வைரியெனும் நிலவின் பிறையணிந்த
கருங்கூந்தலுடையவளை கேசவன் சோதரியை
சரணம்
அமுதமதி வதனம் திகழ் அழகிய மெல்லிடையாளை
திமிரும் பருத்த மென் முலையாளை
அமைதியுடனுலகை அவள் வசப் படுத்தும்
அகிலமே வியக்கும் ஐகன்மோகினியை
No comments:
Post a Comment