செஞ்சடாதரா…..
பல்லவி
செஞ்சடாதரா சங்கர தேவா
தஞ்சமடைந்தேன் தயைபுரிவாயே
துரிதம்
நரர் சுரர் நான்முகன் நந்தி கணங்கள்
சுரபதி ரதிபதி கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
பஞ்சாட்சரனே பரமக்ருபாகரா
நஞ்சுண்டகண்டனே நமச்சிவாயனே
சரணம்
வெஞ்சமரில் திரிபுரனை வதம் செய்த சிவனே
அஞ்சுமாறு காலனைக் காலாலுதைத்தவனே
கஞ்சனைக் காய்ந்த கேசவன் நேசனே
சஞ்சலங்கள் களைந்திடும் சாம்பசதாசிவனே
No comments:
Post a Comment