உனது திவ்ய…..
பல்லவி
உனது திவ்ய நாம மொன்றே துணை
தினகர குலத்தோனே ஶ்ரீ ரகு ராமா
அனுபல்லவி
எனது மனத்தினில் கவலைகள் சூழ்ந்து
எனை வாட்டிடும் போது சென்ன கேசவனே
சரணம்
சனகாதி முனிவரும் தேவருமிந்திரனும்
நாரதரும் நான்முகனும் கரம் பணிந்தேத்தும்
புனிதனே புவி போற்றும் தேவாதி தேவனே
மனிதனாயவதரித்த கோதண்ட ராமா
No comments:
Post a Comment