வஞ்சப் புலன் என் வசமாய் நிசமாய்க்
கொஞ்சிக் குலவிக் குணமாய் மிளிர
எஞ்சித் தமதில் இனிதே உனது
கஞ்சக் கழல்வை கணநா யகனே
பொழிப்புரை:- தேவர்களுக்கெல்லாம் தலைவனே! என்னை வஞ்சித்துத் தீய வழியில் சேர்க்கும் ஐம்புலன்களும் என் அறிவுக்கு உட்பட்டு நல்ல செயல்களைச் செய்பவையாய் மாறி ஒளிவிடுவதற்கு, என் சித்தத்தில் உனது தாமரை போன்ற அடிகளை வைப்பாய்!
தஞ்சமடைந்தேன்…..
பல்லவி
தஞ்சமடைந்தேன் ஶ்ரீ கணநாதனே
அஞ்சலென்றபயம் அளித்தெனைக் காப்பாய்
அனுபல்லவி
பஞ்சாட்சரன் மகனே பார்வதி சுதனே
கஞ்சனைக் காய்ந்த கேசவன் மருகனே
சரணம்
சஞ்சலம் சலனம் தந்திடுமெந்தன்
நெஞ்சம் தறிகெட்டுப் புலன் வழி செல்லாமல்
குஞ்சர முகனே தடுத்தருள்வாயென்றுன்
கஞ்சக் கழல்களை அனுதினம் துதித்தேன்
No comments:
Post a Comment