திருவடி சரணடைந்தேன்…..
பல்லவி
திருவடி சரணடைந்தேன் ஶ்ரீமன் நாராயணா
திருமாலே கேசவனே எனைக் காத்தருள்வாய்
அனுபல்லவி
அருகினிலமர்ந்து பெரிய திருவடியும்
சிறிய திருவடியுயும் போற்றி வணங்கிடுமுன்
சரணம்
திருமகள் மார்பனே திருமலை வாசனே
தரும நெறி காக்க தரணியிலவதரித்த
திருவின் நாயகனே தீனசரண்யனே
கருமவினைப் பயன்கள் தொலைந்திட வேண்டுமென
No comments:
Post a Comment