இந்த ஜென்மம்
….
பல்லவி
இந்த ஜென்மம் கடைத்தேற வழிசொல்வாய்
எந்தையே ஶ்ரீராமா உனையே வேண்டினேன்
அனுபல்லவி
சந்ததமுந்தன் திருவடியே துதித்தேன்
உந்தி கமலப் பெருமானே கேசவா
சரணம்
தந்திர உலகின் மாயையை வெறுத்தொதுக்கி
பந்த பாசத் தளைகளை அறுத்தெறிந்து
முந்தைய பழவினைப் பயன்களைக் களைந்திடவே
அந்தகன் எனக்குன் அருளினையளித்து
No comments:
Post a Comment