இமவான் மகளே…..
பல்லவி
இமவான் மகளே எனைக்காத்தருள்வாய்
உமா மகேச்வரி கேசவன் சோதரி
துரிதம்
அமரரும் முனிவரும் அமரேந்திரனும்
குமரன் கணபதி அனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
சம மென தனக்கொருவர் இல்லாதவளே
சமரிட்டு மகிடன் தலை கொய்தவளே
துரிதம்
கமலாசனனும் கமலநாபனும்
நமச்சிவாயனும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
கமல மலரமர் கலைவணி சரச்வதியும்
கமல மலர்க்கரத்தாள் திருமகளும் நேசிக்கும்
கமலாம்பிகையே கற்பக தருவே
கமலபதம் பணிந்து உனைச் சரணடைந்தேன்
No comments:
Post a Comment