“அதுவாக நானும்”
சோர்வு ஒன்றும் புதிதில்லை நமக்கு
உண்ட பின் உண்டு பசியிலும் உண்டு
அந்த உடற் சோர்வை இங்கு சொல்லவில்லை
நான் சொல்வதிங்கே நம் மனச் சோர்வு
எதிர்பார்ப்பதிகரிக்க சோர்வதிகரிக்கும்
மண்புழு போலவே நாம் செல்லும் வேகம்
கடந்த தூரம் அடைந்த முன்னேற்றம்
சிறிதே எனினும் மகிழ்வுடன் ஏற்போம்
அனைத்திலும் அன்பும் காதலும் கொள்வோம்
அருகில் ஒரு சிறு ஓடையைக் கண்டேன்
ஆரவாரம் எதுவுமின்றி அமைதியாய் அதுவும் ஓடக்கண்டேன்
தானேன் பெரிய நதியாயில்லை ஆறாயில்லை
ஆர்ப்பரிக்கும் கடலாயில்லை என்றே அதுவோ கேட்டதில்லை
அது அதுவாகவே ஓடிக்கொண்டிருந்தது
இருப்பதைக்கொண்டு நாமுமது போலவே
மனத்தினுள் என்றும் நிம்மதி அடைவோம்
ஓடையருகில் நானும் ஒருநாள்
அமைதி கொள்வேனோ என்பதுமறியேன்
No comments:
Post a Comment