ப்ரபூதா பக்திஸ்தே யதபி ந மமாலோலமனஸ:
த்வயா து ஸ்ரீமத்யா ஸதயமவலோக்யோsஹமதுநா I
பயோத:பாநீயம் திசதி மதுரம் சாதகமுகே
ப்ருசம் சங்கே கைர்வா விதிபிரநுநீதா மம மதி: II
ஊசலாடும் மனதுடைய எனக்கு பக்தியில்லையெனினும், உனக்குத்தான் எவ்வளவு பாசம் பற்று?ஆகவே நீதான் நல்லவள், என்னைக் கவனித்துக்கொள். சாதகப்பறவையின் வாயில் இனிய தண்ணீரை மேகம் பொழிகிறதே!என்னை முறையாக வேறு யார் அரவணைத்துள்ளார் என்று சந்தேஹமாகத்தான் உள்ளது.
உன்னையே…..
பல்லவி
உன்னையே நம்பினேன் அன்னையே நீயும்
என்னையே ஆட்கொள்ள வேண்டுமெனப் பணிந்தேன்
அனுபல்லவி
முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் முதலே
பன்னக சயனன் கேசவன் சோதரி
சரணம்
மேகங்கள் பொழியும் மழைநீரைப் பருகிட
தாகமுடன் காத்திருக்கும் சாதகப் பறவைபோல்
வாகாக நிலையின்றி அலைபாயுமென் மனத்தை
ஏகாக்கிர சிந்தையுடன் உனைத் துதிக்கச் செய்திட
No comments:
Post a Comment