*ஆதிசங்கரர் அருளிய
ஆனந்தலஹரீ*
நவீநார்கப்ராஜன் மணிகநக பூஷாபரிகரை:
வ்ருதாங்கீ ஸாரங்கீருசிரநயனாங்கீக்ருதசிவா I
தடித்பீதா பீதாம்பரலலித மஞ்ஜீரஸுபகா
மமாபர்ணா பூர்ணாநிரவதிஸுகை ரஸ்துஸுமுகீ II
அபர்ணை பார்வதீ, இளம் சூர்யன் போல் விளங்கும் வைரம், தங்கம் இவற்றாலான நகைகள் பூட்டப்பட்டவளாய், பெண் மான் கண்கள் போன்ற கண்களால் ஈர்க்கப்பட்ட சிவனையுடையவளாய், மின்னல்போல் மேனியளாய், பீதாம்பரத்தின் மேல் அழகிய ஒட்டியானமணிந்தவளாய் எல்லா ஸெளபாக்கியங்களும் நிரம்பி எனக்கு ப்ரஸன்னையாக இருக்கட்டும்.
பார்வதி ……
பல்லவி
பார்வதி அபர்ணா தேவியுனைத் துதித்தேன்
கார்முகில் வண்ணன் கேசவன் சோதரி
அனுபல்லவி
பார் புகழ் அன்னையே அகிலாண்டேச்வரி
நேர் வந்து எனைக்காக்க உனையே வேண்டினேன்
சரணம்
சூரிய ஒளியுடனும் பெண்மானின் விழியுடனும்
மாரினில் தங்கம் வைர நகை பூட்டி
சீரிய பட்டாடை ஒட்டியாணமணிந்த
காரிகையாய் சிவனின் மனங்கவர்ந்தவளே
No comments:
Post a Comment