அனைத்துமுன்னருளாலே
பல்லவி
அனைத்துமுன்னருளாலே என்றறிவேன் அம்பிகையே
நினைத்து அகம்பாவம் கொள்ளாமலெனைக் காப்பாய்
அனுபல்லவி
தினையளவு உனையே துதித்தாலும் போதும்
பனையளவு பலன் தரும் கேசவன் சோதரியே
சரணம்
சுனை நீராய்ப் பெருகும் கருணையினாலே
வினைப்பயன் அனைத்தும் தொலைந்திடச் செய்து
எனைக் காத்தருளவே மலர்ப் பதம் பணிந்தேன்
தனக்குவமையில்லாத தாயே பராசக்தி
No comments:
Post a Comment