விதாத்ரீ தர்மாணம் த்வமஸி ஸகலாம்நாயஜநநீ
த்வமர்த்தாநாம் மூலம் தநதநம நீயாங்க்ரிகமலே I
த்வமாதி:காமாநாம் ஜநதி க்ருத கந்தர்ப விஜயே
ஸதாம் முக்தேர்பீஜம் த்வமஸி பரம ப்ரஹ்மமஹிஷி II
ஹேதேவி!நீ தர்மம், அந்த்தம், காமம், மோக்ஷம் என்ற நான்கு புருஷார்த்தங்களையும் பயக்க வல்லவள். எல்லா வேதங்களையும் தோற்றுவித்து தர்மங்களைச் செய்ய ஹேதுவாகிறாய். நீயே பொருள் அனைத்திற்கும் ஆண்வேர். c குபேரன் வணங்கும் திருவடித்தாமரை படைத்தவளன்றோ. நீயே காமங்களுக்கும் முதல்வர். ஹே தாயே!நீதானே மன்மதனை வெற்றி கொள்ளச்செய்தாய். பரம்பொருளின் பட்டமஹிஷியாய் இருந்து மோக்ஷத்திற்கும் மூலகாரணமாக இருக்கிறாய்.
You who are the source of all Vedas are also the fountainhead of all
Dharma. At your feet, Kubhera, the lord of all riches prostrates with
reverence because you (are the source of all wealth) have created all the
wealth in the Universe. You who have defeated Manmatha, the God of Love,
are the very origin of Love itself. Oh Consort of the supreme Lord,
Parameshwara, verily you are the very seed of MokSha for the devout
seekers.
பரமேச்வரியே
பல்லவி
பரமேச்வரியே கேசவன் சோதரி
பணிந்தேன் உனையே எனக்கருள்வாயே
அனுபல்லவி
மறைநான்கின் பொருளே காமனின் தலைவியே
அறம் பொருளின்பம் மோட்சம் அளிப்பவளே
சரணம்
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி குபேரன் பணிந்திடும்
திருவடித் தாமரை படைத்த காமேச்வரியே
நரர் சுரரிந்தின் நான்முகன் வணங்கிடும்
பரம் பொருளின் பட்டத்து ராணி நீயே
No comments:
Post a Comment